Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான கழிவறையில் குழந்தையை போட்டு சென்ற 19 வயது விளையாட்டு வீராங்கனை

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (11:59 IST)
டெல்லிக்கு வந்த ஏர்-ஆசியா விமானத்தில் 19 வயது விளையாட்டு வீராங்கனை பெற்ற குழந்தையை கழிவறையில் வீசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து டெல்லிக்கு ஏர்-ஆசியா விமானம் வந்தது. அந்த விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமான ஊழியர்கள் கழிவறையில்  சோதனை செய்தனர். அப்போது அங்கு பிறந்து சில மணி நேரமான குழந்தை ஒன்று கிடந்தது தெரிய வந்தது. மேலும் அங்கு வளர்ச்சி முழுமை அடையாத  நிலையில் சிசு ஒன்று இறந்து கிடந்தது.
 
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெண் பயணிகள் விமானத்துக்குள்ளே  வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விமானத்தில் பயணம் செய்த 19 வயது பெண் விளையாட்டு வீராங்கனை, தான் சிசுவை பெற்றெடுத்து  கழிவறையில் வீசியதாக கூறினார். இதையடுத்து அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரி கூறுகையில், தீவிர விசாரணைக்கு பின் 19 வயது விளையாட்டு வீராங்கனை விமான கழிவறையில் குழந்தை  பெற்று சிசுவை வீசியது வெளிசத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
ஏர் ஆசியா விமான நிர்வாகம் தரப்பில், ‘விமான கழிவறையில் சிசு வீசப்பட்டது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இதனால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு  பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments