Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய பளுதூக்குதல் வீராங்கனை

Advertiesment
பளுதூக்குதல்
, வெள்ளி, 1 ஜூன் 2018 (14:51 IST)
இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த  பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு(24) 53 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
webdunia
இந்நிலையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், சஞ்சிதா சானுவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்திருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் தேசிய பயிற்சி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் முறைகேடு: 45 நாட்கள் காலக்கெடு; பிசிசிஐ-க்கு ரூ.121 கோடி அபராதம்!