ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் உருவாகி இருப்பது ”பெக்ஃபையர்” என்ற ஹிந்தி திரைப்படம்.
இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் இடம் பெறும் ”லாபான் கா கரோபார்” என்ற பாடல், லட்சம் முத்தங்களுடன் தயாராகி இருக்கிறது. இந்த பாடல், இளம்தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், சென்சார் அனுமதித்தால் என்னை இப்படத்தில் நிர்வாணமாக பார்ப்பீர்கள் என்று இப்படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் கூறியுள்ளார்.
இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்படுகிறது.