Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடங்கிப் போன Yes Bank-ல் ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு!!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (11:16 IST)
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து யெஸ் வங்கியில் ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. 
 
தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வரும் நிலையில் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டது.    
 
மேலும், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும், வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுப்பதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் தற்போது தளத்தப்பட்டுள்ளது.
 
இன்னும் மூன்று நாட்களில் மொத்தமாக இந்த கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டுவிடும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதோடு, யெஸ் வங்கியை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி தேவை என்று கணக்கிடப்பட்டுள்ளது. 
 
இதில் எஸ்பிஐ 49% பங்குகளை வாங்கியுள்ளது. அதாவது. ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது ஐசிஐசிஐ வங்கி 100 கோடி பங்குகளை ரூ.10 என்ற வீதத்தில் வாங்க முன்வந்துள்ளது. எனவே, கண்க்கீட்டின் படி ஐசிஐசிஐ ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments