Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைதியா உட்காரு இல்லனா காலை உடைச்சுருவேன் - பாஜக அமைச்சரின் மிரட்டல் பேச்சு

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (13:05 IST)
மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பாஜக அமைச்சர் ஒருவர், அங்கிருந்த நபரின் காலை உடைத்துவிடுவேன் என மிரட்டிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பாஜக அமைச்சர்கள் தொடர்ச்சியாக சர்ச்சைக் கருத்தைக் கூறி வருகின்றனர். கட்சி மேலிடம் அனைவரையும் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டும்  பொற்றுப்பற்று பேசி கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.
 
மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக கட்சியின் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ வந்திருந்தார்.
 
பயனாளிகளுக்கு சக்கர நாற்காளிகள் வழங்கிய பின் அமைச்சர் பாபுல் மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கையில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் அங்கும் இங்குமாய் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனால் கடுப்பான பாபுல், அந்த நபரை ஒரு இடத்தில் உட்காரும் படி எச்சரித்தார்.
சிறிது நேரத்தில் அந்த நபர் மீண்டும் அங்கும் இங்குமாய் உலாவ ஆரம்பித்தார். இதனால் ஓவரா டென்ஷனான பாபுல், அமைதியா உட்கார முடியாதா? இல்லனா காலை உடைச்சு ஓரமா உட்கார வைத்து விடுவேன் என அந்த நபரை மிரட்டினார்.
 
ஒரு அமைச்சர் இப்படி பேசியிருப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குக்மா? நீதிமன்றத்தில் அனல் பறக்கும் வாதம்..!

மேடையில் உற்சாக நடனம்.! பிரதமர் மோடியின் AI வீடியோ வைரல்..!

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளை லட்சாதிபதி ஆக்குவோம்: ராகுல் காந்தி

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்.. 5ஜியை விட 20 மடங்கு வேகம்..!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல்.! மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments