பெங்களூரு அருகே 11 ஆண்டு காதலை முறித்து கொண்டு பெண்ணை திருமணம் செய்ய இருந்தபோது ஐ மிஸ் யூ என்ற குறுஞ்செய்தியால் காதலனின் திருமணத்தை இளம்பெண் நிறுத்தினார்.
பெங்களூர் நெலமங்களாவில் வசித்து வருபவர் அர்ஜூன். இவரும் மைசூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் 11 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் அர்ஜூனுக்கு வெறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனால் அர்ஜூன் அவரது காதலியுடன் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அவரது திருமணம் குறித்து தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
அர்ஜூனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. அர்ஜூன் தனது திருமணத்துக்கு முதல் நாள் இரவு, அவரது காதலிக்கு ஐ மிஸ் யூ என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அந்த குறுசெய்தியை பார்த்த அந்த இளம்பெண் உடனே மைசூரிலிருந்து நெலமக்களாவுக்கு சென்றுள்ளார். அங்கு அர்ஜூன் நண்பர்களை சந்தித்தவருக்கு திருமணம் குறித்த செய்தி தெரியவந்துள்ளது.
இதையடுத்து திருமண மண்டபத்திற்கு விரைந்த அந்த இளம்பெண் திருமணத்தை நிறுத்துபடி கேட்டுள்ளார். இதை கேட்ட அர்ஜூன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமண மண்டபத்திற்கு விரைந்த காவல்துறையினர் அர்ஜூன் குடும்பத்தினர், அந்த இளம்பெண் மற்றும் திருமணம் செய்துக்கொள்ள இருந்த மணப்பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமணத்தை நிறுத்தினர்.