Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு ரூபாய் கூட கொடுக்க வக்கில்லை.! உங்கள் தோப்பனார் வீட்டு காசையா கேட்டோம்..! தயாநிதி மாறன் ஆவேசம்.!!

dayanithi maran

Senthil Velan

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (16:43 IST)
புயல் நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு ஒரு நயா பைசா கூட மத்திய அரசு தரவில்லை என்று திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார்.
 
நாடாளுமன்ற மக்களவையில் பேசிய அவர், கடந்தாண்டு மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்ததாக தெரிவித்தார். இதை அடுத்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்த, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், புயல் நிவாரண நிதியாக 12,550 கோடி கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு ஒரு நயா பைசா கூட தரவில்லை என்றும் குற்றம் சாட்டினார்
 
மேலும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டதாகவும், கை அசைத்ததாகவும், செய்தியாளர்களை சந்தித்ததாகவும், ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்க வக்கில்லாமல் சென்று விட்டதாக தயாநிதி மாறன் கடுமையாக சாடினார்.
 
நாங்கள் உங்கள் வீட்டு காசை கேட்கவில்லை, உங்கள் அப்பா வீட்டு காசை கேட்கவில்லை, தமிழகத்தின் வரிப்பணத்தைதான் கேட்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததை தயாநிதி மாறன் சுட்டிகாட்டி பேசினார். அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  உதயநிதி மரியாதையாக பேச வேண்டும் என்று கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.

 
உங்கள் தோப்பனார் வீட்டு காசையா கேட்டோம் என  நாங்கள் திருப்பி கேட்டால் உங்களால் பதில் கூற முடியுமா என நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதி மாறன் பதிலடி கொடுத்தார். மேலும் உங்கள் பேச்சில் வன்மம் இருப்பதாகவும் அவர் புகார் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

411 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி விட்டனர்: கார்கே கூறிய அதிர்ச்சி தகவல்