Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

411 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி விட்டனர்: கார்கே கூறிய அதிர்ச்சி தகவல்

Advertiesment
Mallikarjun Kharge

Mahendran

, வியாழன், 8 பிப்ரவரி 2024 (16:23 IST)
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து 411 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவால்தான் வசப்படுத்தப்பட்டு உள்ளார்கள் என்றும் பல காங்கிரஸ் ஆட்சிகளை பாஜகவினர் கவிழ்த்து ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
2014 ஆம் ஆண்டு மத்தியில் பாஜக  பதவியேற்ற பின்னர் தான் பல கட்சிகள் உடைக்கப்பட்டு அந்த கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசி இருக்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய கார்கே கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 411 பேர் பாஜகவுக்கு சென்றுள்ளனர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பல ஆட்சிகளை பாஜக கலைத்துள்ளது என்றும் தெரிவித்தார் 
 
பாஜகவினர் தாங்கள் பெற்ற வெற்றியை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசுவார்கள், தோல்வியை தடம் தெரியாமல் மறைத்து விடுவார்கள், எனவே நாங்கள் தோல்வியை சுட்டிக்காட்டும் போது அது முக்கியத்துவம் பெறவில்லை, எனவேதான் மோடி அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கையை வெளியிடுகிறோம் என்றும் வழிகாட்டி தெரிவித்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்: ஈரான், ஆப்கன் எல்லைகளை மூட உத்தரவு..!