Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ParleG பிஸ்கட்ல இருக்க பொண்ணு நான்தான்! இழப்பீடு கொடுக்கணும்! - பகீர் கிளப்பிய பீகார் சிறுமி!

Prasanth K
செவ்வாய், 10 ஜூன் 2025 (12:39 IST)

பிரபலமான Parle G பிஸ்கட்டில் உள்ள குழந்தை நான் தான் என பீகாரை சேர்ந்த சிறுமி ஒருவர் கூறி வருவது ட்ரெண்டாகியுள்ளது.

 

90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத நினைவுகளில் ஒன்று என்றால் பார்லே ஜி பிஸ்கட். சக்திமான் ஸ்டிக்கருக்காக பார்லே ஜி வாங்கிய பலரும் அந்த பிஸ்கட் பாக்கெட்டின் முன்பக்கம் இருக்கும் குழந்தையின் படத்தை ரசிக்க தவற மாட்டார்கள். இத்தனை ஆண்டுகள் ஆகியும் பார்லே ஜி தொடர்ந்து அந்த குழந்தை புகைப்படத்தையே தனது பிஸ்கட் கவரில் பயன்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில் பீகாரை சேர்ந்த 11 வயது சிறுமி நான் தான் அந்த பார்லே ஜி பிஸ்கட் கவரில் உள்ள குழந்தை என பேட்டியளித்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஒரு செய்தியாளர் அவரிடம் இதுபற்றி கேட்டபோது, தனது சிறு வயது புகைப்படத்தை யாரோ சோசியல் மீடியாவில் ஷேர் செய்துவிட்டதாகவும், அதை பார்லேஜி நிறுவனம் பயன்படுத்திக் கொண்டதுடன் தங்களுக்கு பணம் எதுவும் தரவில்லை என்று புகார் கூறுகிறார்.

 

அதற்கு அந்த பத்திரிக்கையாளர், நீ பிறப்பதற்கு முன்னாலிருந்தே பார்லேஜி கவரில் இந்த படம் உள்ளது என்று கூற, உடனே அந்த சிறுமி அது தனது முன் ஜென்மத்தில் எடுத்த படம் என்று ஒரு புது கதையை விடுகிறார். தனது முன் ஜென்மத்தில் நான் தான் அந்த பார்லேஜி குழந்தை என்கிறார். 

 

பீகாரை சேர்ந்த ப்ரியா சர்மா என்ற பெண்ணின் இளம் மகளான இந்த 11 வயது சிறுமி பெயரே பார்லே ஜி தான். இவரது கூற்றுகள் உண்மைக்கு முரணாக உள்ளதால் பலரும் அதை கிண்டல் செய்து வருகின்றனர்.

 

பார்லே ஜி பிஸ்கட் கவரில் உள்ள அந்த குழந்தை யார் என்று பல ஆண்டுகளாகவே கேள்வி இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த குழந்தை இன்போசிஸ் சுதா மூர்த்தியின் குழந்தை புகைப்படம் என்றும், நீரு தேஷ்பாண்டே, குஞ்சன் கந்தானியா என்பவர்களின் புகைப்படம் என்றும் மூன்று வகையான தியரிகள் நிலவி வருகின்றது. ஆனால் இதுகுறித்து முன்பு விளக்கமளித்த பார்லேஜி நிறுவனம், அந்த புகைப்படம் எந்த குழந்தையோடதும் அல்ல, ஒரு ஓவியமாக வரையப்பட்டது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments