Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலைகளில் ரூபாய் நோட்டுகளை வீசிய இளைஞர்! ஐதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva
வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (07:02 IST)
ஐதராபாத்தில் ஒரு இளைஞர் திடீரென சாலையில் ரூபாய் நோட்டுகளை வீசியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ரூபாய் நோட்டை எடுக்க போட்டி போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காகவும், லைக்ஸ்களை பெறுவதற்காகவும் சிலர் அத்துமீறி ரிஸ்க் எடுத்து வருகின்றனர் என்பதும் சில கிறுக்குத்தனமான செயல்களையும் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஹைதராபாத்  நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் லைக் பெற வேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் ஹைதராபாத்தில் குட்கட்பள்ளி பகுதியில் திடீரென ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார்.

யூட்யூபில் பிரபலமாக இருக்கும் மகாதேவ் என்ற இந்த இளைஞர் செய்த காரியத்தால் அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் தங்களுடைய வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு ரூபாய் நோட்டுகளை சேகரிப்பதில் ஈடுபட்டனர்.

இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து பொது இடத்தில் அத்துமீறி செய்த காரியம் காரணமாக மகாதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை அடுத்து போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments