Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளியில் சத்தம்போட்ட மாணவர்களை கண்டிக்க போலீசாரை வரவழைத்த ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

Advertiesment
பள்ளியில் சத்தம்போட்ட மாணவர்களை கண்டிக்க போலீசாரை வரவழைத்த ஆசிரியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

, வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (15:00 IST)
பள்ளியில் சத்தம் போட்டு ஆசிரியர்களுக்கு அடிபணியாத மாணவர்களை கண்டிப்பதற்காக ஆசிரியர்கள் போலீசாரை வரவழைத்த சம்பவம் சிவகங்கை அருகே நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்பில் சத்தம் போட்டு ஆசிரியரை மதிக்காமல் இருந்ததாகவும் ஆசிரியர் நடத்திய பாடங்களை கவனிக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.
 
இதனை அடுத்து ஆசிரியர் எவ்வளவோ மாணவர்களை சமாதானத்தை படுத்திய போதும் முடியவில்லை என்பதை எடுத்து அவர் திடீரென மாணவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று கதவை பூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
அதன்பின்னர் ஆசிரியர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் வந்து மாணவர்களிடம் லத்தியால் அடிப்பேன், துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுவேன் என்று மாணவர்களை மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புகார் சம்பந்தமாக அரசு உதவி பெறும் பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது
 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன்.. தற்கொலைக்கு முயன்றாரா?