Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூ. 2 லட்சம் வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவன்

Advertiesment
ரூ. 2 லட்சம் வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற கணவன்
, வியாழன், 8 பிப்ரவரி 2018 (09:43 IST)
கொலகத்தாவில் வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை வீற்ற கணவனை போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகத்தில் நாகரிகமும், தொழில் நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே போனாலும், மாறாத ஒரு கொடிய விஷயம் வரதட்சணை, வரதட்சணையின் கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு போகும் அவலமும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த ரிதா சர்கார் என்ற பெண்ணை அவரது கணவர், 2 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி வந்தார். இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை நேர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரிதா சர்கார் வயிற்று வலி ஏற்பட்டதால் அவரது கணவருடன் செக்கப்பிற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர்கள் ரிதா சர்காரிற்கு வயிற்றில் குடல் இறங்கி விட்டதாக கூறி அவரது கிட்னியை எடுத்து பணத்திற்காக விற்றுவிட்டனர். இதற்கு ரிதா சர்காரின் கணவர் உடந்தையாக இருந்திருக்கிறார்.  இதனை அறியாத ரிதா சர்கார் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நாளில் ரிதா சர்காருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சோதனை மேற்கொண்டதில், அவருடைய வயிற்றில் ஒரு கிட்னி இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ரிதா சர்கார் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தார். 
 
இதனையடுத்து போலீஸார் தலைமறைவாக் இருந்த ரிதா சர்காரின் கணவனை கைது செய்து விசாரித்ததில், வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்றதை ஒப்புக் கொண்டார். வரதட்சணைக்காக மனைவியின் கிட்னியை விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி வழங்கிய ஸ்டாலின்