முதல் மனைவிக்கு சொத்தை எழுதி வைத்த கணவன்! கூலிப்படை ஏவிக் கொன்ற இரண்டாவது மனைவி!

Prasanth K
ஞாயிறு, 12 அக்டோபர் 2025 (10:43 IST)

ஜார்கண்ட் மாநிலத்தில் சொத்து பிரச்சினையில் கணவரை இரண்டாவது மனைவி கூலிப்படை ஏவிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சன்ஹோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாலி. இவருக்கு 2 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளது. முதல் மனைவி வாரணாசியில் தனியாக வசித்து வந்த நிலையில், ராம்பாலி ராஞ்சியில் இரண்டாவது மனைவி சம்பாவுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 

சமீபத்தில் ராம்பாலி தனது சொத்துக்களில் சிலவற்றை விற்ற நிலையில் அந்த பணத்தை தனது முதல் மனைவிக்கு கொடுத்துள்ளார். இதையறிந்த சம்பா, ராம்பாலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், தனது கணவரை கொல்ல கூலிப்படையையும் ஏவியுள்ளார். அவர்கள் ராம்பாலியை கொன்று புதைத்த நிலையில், ராம்பாலியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார் சம்பா.

 

ஆனால் சம்பாவிடம் காவல்துறை விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீஸார் விசாரணையை கடுமையாக்கிய நிலையில் அவர் மேற்படி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை கைது செய்துள்ள காவல்துறை, கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் ஏ.கே.-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள்.. தீவிரவாதிகளுக்கு உதவியா?

நீச்சல், சைக்கிள், மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அண்ணாமலை.. எல் முருகன் வாழ்த்து..!

அகதிகளுடன் சென்ற படகு கடலில் மூழ்கி விபத்து: 100 பேரை காணவில்லை?

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. ரூ.91,000ஐ தாண்டிய ஒரு சவரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments