Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவனே மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி – கொலை செய்து தலைமறைவு !

Advertiesment
கணவனே மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி – கொலை செய்து தலைமறைவு !
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (08:55 IST)
டெல்லியில் தன் இரண்டாவது மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு கணவன் வற்புறுத்திய நிலையில் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ஜலில் ஷெய்க் என்ற நபர் 7 மாதங்களுக்கு முன்னர் பாத்திமா சர்தார் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவரரின் முதல்மனைவி மேற்கு வங்கத்தில் தன்யே வசித்து வந்துள்ளார்.

அதிகமாக வருவாய் இல்லாத பேராசைப் பிடித்த ஜலீல் பணம் சம்பாதிப்பதற்காக தனது மனைவி பாத்திமாவை விபச்சாரத்தில் ஈடுபட சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். என்ன சொல்லியும் தனது ஆசைக்கு இணங்க மறுத்த பாத்திமாவைக் கொலை செய்து பாலிதீன் கவர்களில் போட்டு அடைத்து மறைவான பகுதியில் வீசிவிட்டு தலைமறைவாகி விட்டார் ஜலீல்.

சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் மேற்கு வங்கத்தில் ஜலீல் தலைமறைவாக இருப்பதை அறிந்து அங்கு ரகசியமாக அவரைத் தேடி வந்துள்ளனர். கொல்கத்தாவில் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த அவரைப் போலீஸார் சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”உலகம் பெரும் ஆபத்தை எதிர்கொள்ளும்”..இம்ரான் கான் எச்சரிக்கை