இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் அதிதீவிரப் புயலாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியளவில் ஒடிசா மாநிலம் பாராதீப்புக்கு தெற்கே 990 கிம்.மீ தொலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளது.
மேலும் அடுத்த 12 மணி நேரத்துக்கு அதிதீவிரப் புயலாக மாறும் எனவும், அடுத்த 24 மணிநேரத்தில் மெதுவாக வடக்கு நோக்கியும், அதன்பின்ம், வடகிழக்கு திசை நோக்கியும் நகரும் எனவும் , வரும் 20 ஆம் தேதி பிற்பகல் வேலையில், மேற்கு வங்கம் சாகர் தீவு வங்க தேசத்திலுள்ள ஹாதியா தீவு இடையே கரையைக் கடக்கின்றபோது, மணிக்கு 180 கிமீ வேகத்தில் பலமான காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 19 , 20 ஆம் தேதிகளில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இரு மாநிலங்களை ஒட்டிய கடற்பகுதிகளுக்கு மீனவர்களை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.