Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சபரிமலைக்குள் நுழைந்தது பெண் மாவோயிஸ்ட்டுகளா? பகீர் கிளப்பும் ஹெச்.ராஜா

Advertiesment
சபரிமலைக்குள் நுழைந்தது பெண் மாவோயிஸ்ட்டுகளா? பகீர் கிளப்பும் ஹெச்.ராஜா
, வெள்ளி, 4 ஜனவரி 2019 (09:12 IST)
சபரிமலைக்குள் சென்ற இரண்டு பெண்கள் மாவோயிஸ்டுகள் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சபரிமலைக்குள் செல்லக் கூடாது என்ற கடும் எதிர்ப்பையும் மீறி மலப்புரம் பகுதியை சேர்ந்த கனகதுர்கா (46) மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து(40) ஆகிய இருவர் கடந்த 2ஆம் தேதி அதிகாலையில் சபரிமலைக்குள் சென்று தரிசனம் செய்தனர். இதற்கு கேரள அரசு பின்பற்றிய டெக்னிக் தான் ஹைலைட்டே. பக்தர்கள் எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த வேலையில் பெண்களை உள்ளே அழைத்து சென்றது. அவர்கள் திருநங்கைகள் என கூறி சன்னிதானத்திற்குள் அழைத்து சென்றது என பலவற்றை கூறலாம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா முழுவதிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
webdunia
இந்நிலையில் இதுகுறித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திருட்டுத்தனமாக 2 மாவோயிஸ்ட்டுகளை ஒளித்து வைத்து காலை 3.45 க்கு காவல்துறையிலுள்ள தன் கையாட்கள் மூலமாக சபரிமலையின் புனிதத்தை கெடுத்திட சதி செய்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் தக்க முறையில் தண்டிக்கப்படுவார். இவர் ஒரு இந்து விரோத சதிகாரர். முதல்வராக இருக்க தகுதியற்றவர் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 14 ரவுடிகள் கைது! நெல்லையில் பரபரப்பு