Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்பயா குற்றவாளிகளை இன்று தூக்கிலிட்ட நபருக்கு எவ்வளவு தொகை ?

Advertiesment
நிர்பயா குற்றவாளிகளை இன்று தூக்கிலிட்ட நபருக்கு எவ்வளவு தொகை ?
, வெள்ளி, 20 மார்ச் 2020 (18:50 IST)
நிர்பயா குற்றவாளிகளை இன்று தூக்கிலிட்ட நபருக்கு எவ்வளவு தொகை ?

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் இன்று அதிகாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசிவரை சட்டப்போராட்டம் நடத்திய நால்வரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சற்றுமுன் நால்வரும் தூக்கில் தொங்கினர்.
 
நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக டெல்லியில் இருந்து அதிகாலையில் செய்தி வெளிவந்துள்ளது
 
 
அதிகாலை வரை நடத்திய சட்டப்போராட்டம் செய்தத்தை மறுதலித்து, தீர்ப்பை உறுதி செய்திருந்தது நீதித்துறை என்பதால் நிர்பயா குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் கடைசி வரை சட்டப்போராட்டம் செய்த குற்றவாளிகளின் உறவினர்கள் பெரும் சோகத்துடன் உள்ளனர்.
 
இந்நிலையில், குற்றவாளிகள்  4 பேரை தூக்கிலிடவர் பவன் ஜலாத்.இவர் பரம்பரை வழியாக இந்த தூக்கிலிடும் பணியை செய்து வருகின்றார்.  அதாவது, பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை இவரது தாத்தாதான் தூக்கிலிட்டதாக தெரிகிறது. 
 
ஆனால், பவான் ஜலாத் இதுவரை யாரையும் தூக்கிலிடவில்லை; இன்று நால்வரையும் தூக்கிலிட்டதற்காக மொத்தமாக ரூ.60 ஆயிரம் ( தலைக்கு ரூ. 15000 )பெறவுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கனடா பிரதமரின் மனைவியை நலம் விசாரித்த 8 வயது சிறுவன்