Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

300 வருடங்களாக வீடுகளில் கதவுகளே இல்லாத அதிசய கிராமம்

Advertiesment
300 வருடங்களாக வீடுகளில் கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
, வியாழன், 16 ஜூன் 2016 (19:05 IST)
மராட்டிய மாநிலத்தின் ஒரு கிராமத்தில் 300 வருடங்களாக கதவுகளே இல்லாமல் வீடுகள் கட்டப்படும் அதிசயம் நடந்து வருகிறது.


 

 
மராட்டிய மாநிலத்தில் சிங்னாபூர் என்ற கிராமத்தில் மக்கள் வீடுகளுக்கு கதவுகளே இல்லாமல் விடுகளை கட்டுகிறார்கள். அங்கு எந்த திருட்டும் இதுவரை ஏற்பட்டதில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். 
 
அந்த மக்கள் சனி பகவானையே தங்களுக்கு துணையாக கருதுகிறார்கள். அந்த கடவுள் மீது உள்ள நம்பிக்கையால்தான் 300 வருடங்களாக அவர்கள் வீடுகளுக்கு கதவுகள் வைத்து கட்டுவதே இல்லையாம்.
 
அதற்கு பின்னால் ஒரு கதை இருப்பதாக இந்த கிராம மக்கள் கூறுகிறார்கள். அதாவது 300 வருடங்களுக்கு முன்பு கடும் மழைகாரணமாக பனாஸ்னாலா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அந்த வெள்ளத்தில் 1.5 மீட்டர் நீளமுள்ள கனமான பலகை போன்ற பொருள் மிதந்து வந்துள்ளது. அது அந்த கிராமத்தின் அருகே கரை ஒதுங்கியது. அதை குச்சியால் குத்திப் பார்த்த போது, அதிலிருந்து ரத்தம் வந்துள்ளது. 
 
அதைக் கண்ட அந்த கிராம மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியிருந்த போது, அன்றிரவு கிராம தலைவர் கனவில் சனி பகவான் தோன்றியதாகவும், கரை ஒதுங்கியது என்னுடைய சிலைதான். அதைவைத்து வழிபடுங்கள். மேலும் வீடுகளில் யாரும் கதவுகளை வைக்க வேண்டாம். அப்போதுதான் நான் வந்து அருள் பாலிக்க முடியும் என்று கூறியதாம்.
 
அதிலிருந்துதான் 300 வருடங்களாக கதவுகளே இல்லாமல், அந்த கிராமத்தில் வீடுகள் கட்டப்படுகிறது என்று கூறப்படுகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

68 வயதிலும் பள்ளியில் படிக்கும் முதியவர்