இளமையில் கல் என்பார்கள் ஆனால் படிப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 68 வயது முதியவர் ஒருவர் பள்ளியில் படித்து வருகிறார்.
துர்கா காமி என்ற 68 வயது நேபாள் முதியவர் ஒருவர் பள்ளிக்கு செல்வது, சிறு வயதான மணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து பாடம் கவனிப்பது மாணவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
68 வயதான துர்கா காமிக்கு சிறு வயது முதலே ஆசிரியராக வேண்டும் என்பது லட்சியம். ஆனால் குடும்ப வறுமை காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. இதனை புரிந்து கொண்ட ஒரு பள்ளி இவருக்கு உதவ முன்வந்தது.
சில வருடங்களுக்கு முன்பு அந்த மேல்நிலைப்பள்ளி துர்கா காமியை அங்கீகரித்து அவருக்கு புத்தகம் மற்றும் சீருடையை இலவசமாக வழங்கியது. தற்போது பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் 68 வயதான மாணவர் துர்கா காமி வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டிருப்பது தனது ஆசை என்று கூறுகிறார்.