Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியை மிரட்டும் கொடூர ‘ஜட்டி கேங்’ கும்பல்! – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (12:19 IST)
திருப்பதியில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஜட்டி கேங் குறித்து போலீஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பதியில் சமீப காலமாக புறநகர் பகுதிகளில் தனியாக உள்ள வீடுகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த குற்ற செயல்கள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட கும்பலே செய்து வருவதை கண்டு பிடித்துள்ளனர்.

ஜட்டி மட்டுமே அணிந்து கூரிய ஆயுதங்களுடன் வரும் அந்த கும்பல் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளை குறிவைத்து கொலை, கொள்ளை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜட்டி கேங் என பெயரிடப்பட்டுள்ள அந்த கும்பலிடன் ஜாக்கிரதையாக இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் யாராவது காலிங் பெல் அடித்தாலோ, வினோத சத்தம் கேட்டாலோ, தண்ணீர் குழாய் திறந்திருப்பது போன்ற சத்தம் கேட்டாலொ வீட்டிற்கு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் செல்பவர்கள் காவல்துறையிடம் தெரிவித்து விட்டு செல்லுமாறும் கூறப்பட்டுள்ளது. இது திருப்பதி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments