Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை – மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு !

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (12:52 IST)
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி  புயல் ஒன்று வர இருப்பதாக சில தினங்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இன்று முதல் ஃபானி புயல் அதி தீவிரப் புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர இருப்பதால் வட தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபானி புயல் பாதிப்பிற்குள்ளாகும் என சந்தேகப்படும் நிலையில் உள்ள மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தமிழகத்துக்கு ரூ.309.375 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஆந்திராவுக்கு 200.25 கோடி ரூபாய், ஒடிசாவுக்கு 340.875 கோடி ரூபாய் மேற்கு வங்கத்துக்கு 235.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

தேர்தல் பரபரப்பு மற்றும் ஐபிஎல்.. தெலுங்கானாவில் மூடப்படும் திரையரங்குகள்..!

இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.. முதல் முறையாக குடியுரிமை பெற்ற 14 பேர்..!

இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை பெய்யும்: எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments