Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடியுரிமை சட்ட திருத்தம்: திடீரென இறங்கி வந்த உள்துறை அமைச்சகம்

குடியுரிமை சட்ட திருத்தம்: திடீரென இறங்கி வந்த உள்துறை அமைச்சகம்
, வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:48 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மாணவர்கள் இந்தியா முழுவதும் போராடி வருகின்றனர். ஒரு சில இடங்களில் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கின்றன. அரசியல் கட்சிகள் மாணவர்களை தூண்டி விடுவதாகவும், மாணவர்கள் சுயமாகவே போராட்டம் செய்து வருவதாகவும் இரு வேறு கருத்துக்கள் எழுந்து வருகின்றன
 
இந்த நிலையில் குடியுரிமை சட்டம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் பலர் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான திரையுலக பிரமுகர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் போராட்டம் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த சட்டத்திருத்தம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 
 
அதன்படி குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் யார் வேண்டுமானாலும் பரிந்துரைகளை வழங்கலாம் என்றும் அந்தப் பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டு சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் சட்ட விதிகளை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Amazon Fab Phones Fest Sale: போன்களுக்கு சூப்பர் ஆஃபர்!!