Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Amazon Fab Phones Fest Sale: போன்களுக்கு சூப்பர் ஆஃபர்!!

Advertiesment
Amazon Fab Phones Fest Sale: போன்களுக்கு சூப்பர் ஆஃபர்!!
, வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:20 IST)
அமேசான் Fab Phones Fest சேலை துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மீது 40% வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.  
 
டிசம்பர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை அமேசான் நிறுவனம் ஃபேப் போன் திருவிழாவை நடத்தி வருகிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில், சலுகையில் பெற்றுக் கொள்ளலாம். 
 
இந்த சலுகைகள் ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ, ஒன்ப்ளஸ் 7 சீரிஸ், சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ், விவோ யூ சீரிஸ் போன்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் ஈ.எம்.ஐயில் வாங்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்மார்ட்போன் மீதான தள்ளுபடிகள்: 
1. ஒன்ப்ளஸ் 7டி (128ஜிபி) ரூ. 34,999க்கு தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது.  மேலும் எச்.டி.எஃப்.சி கார்ட் மூலமாக வாங்கும் போது ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கிறது.  
 
2. ஒன்ப்ளஸ் 7 ப்ரோ (6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி) ரூ. 39,999-க்கு கிடைக்கிறது.  ஒன்ப்ளஸ் 7 ப்ரோ (8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி) ரூ. 42,999க்கு கிடைக்கிறது.  
 
3. ஐ.சி.ஐ.சி.ஐ கார்ட்கள் மூலம் வாங்கப்படும் ரெட்மி நோட் 8-க்கு ரூ.750 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.  நோட் 8 ப்ரோக்களுக்கு ரூ. 1000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
 
4. எச்.டி.எஃப்.சி கார்ட் மூலமாக Apple iPhone 11, iPhone 11 Pro ஸ்மார்ட்போன்களை வாங்கினால் ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும். 
 
5. சாம்சங் எம் 10 ஸ்மார்ட்போன் ரூ.7499க்கும்,  கேலக்ஸி எம் 20 ரூ. 11,499க்கும், கேலக்ஸி எம் 30 ரூ. 15,999க்கும், கேலக்ஸி எம் 40 ரூ. 16,999க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்லூரிகளுக்கு ஜனவரி வரை விடுமுறை..