அமெரிக்க மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னராகும் இந்திய வம்சாவளி பெண்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்க மாகாணத்தின் கவர்னராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ஏற்கனவே அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார்
மேலும் கூகுள் சிஇஓ உள்பட உலகின் பல முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இந்தியர்கள் தான் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள மேரிலாந்து என்ற மாகாணத்தின் லெப்டினன்ட் கவர்னராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் என்ற பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனையடுத்து அருணா மில்லருக்கு அமெரிக்க இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள இந்தியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.