இனி உருவாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் ஹெலிகாப்டர் இறங்கும் வசதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் மற்றும் இயற்கை பேரிடர் ஏற்படும் போது அவசர காலத்திற்கு மீட்பு படையினர் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி செய்யப்படும் என்றும் அனைத்து புதிய தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஹெலிபேட் வசதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் சுறுசுறுப்பாக செய்யப்படும் என்றும் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டால் மீட்பு படையினர் மிக விரைவாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஹெலிபேடு அமைக்கும் பணி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்