Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும்'' - ஆறுமுக சாமி அறிக்கையில் தகவல்

''ஜெயலலிதாவை காப்பாற்றியிருக்க முடியும்'' - ஆறுமுக சாமி அறிக்கையில் தகவல்
, புதன், 19 அக்டோபர் 2022 (15:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க  நீதிபதி ஆறுமுகம்சாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து அறிக்கை சமந்துள்ள நிலையில், இதில், குறிப்பிட்ட  அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என தகவல் வெளியாகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலிதா மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்  வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இதயத்தில் 14மிமீ., மேல் வெஜிடேசசன் இருந்ததாகவும், ஒரு நோயாளிக்கு 10 மிமீ மேல் வெஜிடேசன் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மூலம் கரைக்கபடாவிட்டால் அதற்கு அறுவைச் சிகிச்சை மாற்றுத் தீர்வு என மருத்துவமனை  நெறிமுகளின்படி கூறப்படும் நிலையில், அப்போலோ மருத்துவமனை அறுவைச்சிகிச்சை செய்து ஜெயலிதாவுக்கு வெஜிடேசனை அகற்றியிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆதாரம் இல்லாம வீடியோ போட்டால் கடும் நடவடிக்கை! – யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை!