Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு: இந்திய வானிலை மையம்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:35 IST)
அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு டெல்லி உள்பட 6 மாநிலங்களில் கடும் பனி பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட பல பகுதிகளில் பனிப்பொழிவு இருந்து வரும் நிலையில் பனித்திரை காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் டெல்லி போன்ற மாநிலங்களில் சுமார் 6 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் பதிவாகியுள்ளதை அடுத்து வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் டெல்லி, இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது
 
அதேபோல் ராஜஸ்தான், பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும் அடர்ந்த பனி மூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments