கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவனுடன் உல்லாசமாக இருந்ததற்காக போக்சோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியை, ஜாமீன் கோரி மனு அளித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள மாகிம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் பிபாஷா குமார். இவருக்கும் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்த நிலையில், இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பிபாஷா மாணவனை அடிக்கடி விடுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் இது மாணவனின் பெற்றோருக்கு தெரிய வர அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் பிபாஷா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த செய்தி அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஆசிரியை பிபாஷா ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தான் வேண்டாமென்று ஒதுங்கி சென்றபோதும் மாணவன் தன்னை விரட்டி விரட்டி காதலித்ததாகவும், அந்த மாணவன் தன்னை காதலிப்பது தெரிந்ததால் அவரது தாய் வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K