Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் வறது கூட தெரியாம.. தண்டவாளத்தில் தூங்கிய அரைபோதை ஆசாமி! அடுத்த நடந்த சம்பவம்! - வைரலாகும் வீடியோ!

Advertiesment
Drunk man on the track

Prasanth Karthick

, வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (11:45 IST)

உத்தர பிரதேசத்தில் மது போதையில் தண்டவாளத்தில் படுத்திருந்த ஆசாமி மீது ரயில் கடந்து சென்றும் அவர் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாடு முழுவதும் பல பகுதிகளில் ரயில் தண்டாவளங்களில் சிலர் ரயில் வருவதை கவனிக்காமல் கடப்பது, மதுபோதையில் படுத்துக் கிடப்பது அல்லது தற்கொலை முயற்சியால் ரயிலில் அடிப்பட்டு இறப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் படுத்திருந்த நபரை ரயில் கடந்து சென்றும் அவருக்கு ஏதும் ஆகாத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள வழித்தடத்தில் ரயில் ஒன்று சென்றுக் கொண்டிருந்தபோது, ஆசாமி ஒருவர் தண்டவாளத்தின் குறுக்கே படுத்திருப்பதை ரயிலின் லோகோ பைலட் கவனித்துள்ளார். ஒலி எழுப்பியும் அவர் எழுந்திரிக்காத நிலையில் ரயில் அவர்மேல் தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. இதுகுறித்து லோகோ பைலட் உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தெரிவித்துள்ளார்.
 

 

உடனே அங்கு ரயில்வே போலீஸார் சென்று பார்த்தபோது அங்கு அந்த ஆசாமி எந்த அசைவும் இன்றி தண்டவாளத்தில் கிடந்துள்ளார். அருகே சென்று பார்த்தபோது அவர் தூங்கிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. அவரை தட்டி எழுப்பியதும் மதுபோதையில் இருந்த அந்த ஆசாமி அது தண்டவாளம் என்று தெரியாமலே வந்து படுத்து கிடந்ததாக கூறியுள்ளார். எனினும் ரயில் அவரை கடந்து சென்றும் சிறு காயமும் இன்றி அவர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அர்ஷத்தும் எனக்கு மகன் போலதான்.. தங்கம் வென்றதில் மகிழ்ச்சி! - நீரஜ் சோப்ரா தாயார் நெகிழ்ச்சி!