Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன் குழந்தை எதிரிலே நான் சாக போறேன் என வினளயாட்டாக கூறி வீடியோ எடுத்தவர்,சில நொடியிலேயே உயிர் பிரிந்த சோகம்...

Advertiesment
தன் குழந்தை எதிரிலே நான் சாக போறேன் என வினளயாட்டாக கூறி வீடியோ எடுத்தவர்,சில நொடியிலேயே உயிர் பிரிந்த சோகம்...

J.Durai

, வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (12:45 IST)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஜெகதீஷ். 
 
இவருக்கு திருமணமாகி, 1- ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளை உள்ளது.
 
லாரி ஓட்டுனராக பணிபுரியும் ஜெகதீஷ் தன் மனைவி அவங்க பெற்றோர் வீட்டுக்கு பெற்றோரை பார்க்க சென்றிருந்த நிலையில் தன் பிள்ளையுடன் பொழுதை கழித்து வந்துள்ளார்.
 
அப்போது தன் பிள்ளை எதிரிலேயே நான் சாகப் போறேன் டா என கூறி இதை வீடியோ எடுக்கலாம் என செல்போனை ஆன் செய்து வைத்து விட்டு தன் மகனுடன் பேச்சுவார்த்தை கொடுத்துக் கொண்டே படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் புடவையில் தன் கழுத்திற்கு சுருக்கு வைத்துள்ளார்.
 
சுருக்கு வைத்த சில நொடியிலேயே ஜெகதீஷ் உயிர் பிரிந்தது. 
 
பின்னர் தன் தனது தந்தை விளையாட்டாக தான் நடிக்கிறார் என அப்பாவியாக பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென அசைவற்றுக் கிடந்த தன் தந்தைக்கு மூச்சு இருக்கிறதா என கைவைத்து பார்த்து மூச்சு நின்றுவிட அவரைக் காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கல் மனதையும் கரைய வைக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
விளையாட்டாக வீடியோ எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் மேல்செங்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்களக் கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்யுங்கள்! அன்புமணி ஆவேசம்..!