இந்தியாவிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலங்கள் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மக்கள் அதிகமாக மகிழ்ச்சியுடன் வாழும் மாநிலங்கள் குறித்து India Happiness Report 2020 வெளியாகியுள்ளது. வேலை, உறவுகள், உடல்நலம், இரக்கம், மதம் மற்றும் ஆன்மீக சிந்தனைகள் ஆகிய ஆறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் மிசோரம் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாம் இடத்தில் பஞ்சாப் மாநிலமும், மூன்றாவதாக அந்தமான் நிக்கோபார் தீவுகளும் உள்ளன. குஜராத், உத்தர பிரதேச மாநிலங்களும் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பெயர் இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.