Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடிய விடிய போராட்டம்; பாராளுமன்ற வளாகத்தில் கூடாரம் போட்ட எம்.பிக்கள்!

Advertiesment
விடிய விடிய போராட்டம்; பாராளுமன்ற வளாகத்தில் கூடாரம் போட்ட எம்.பிக்கள்!
, செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (08:20 IST)
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகம் முன்பு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் நேற்று ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்ட விவசாய மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிகள் பேசி வந்தனர். இந்நிலையில் தங்கள் கருத்துகளை ஏற்று மசோதாவில் மாற்றங்கள் செய்யவில்லையென எம்.பிக்கள் புகார் தெரிவித்து பாராளுமன்ற விதிகள் புத்தகத்தை கிழித்து அமளியில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டனர். விடிய விடிய பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திய அவர்கள் சஸ்பெண்டை ரத்து செய்யும் வரை போராடுவோம் என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கா? சுகாதார செயலாளர் பேட்டி!