Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! – 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு!

கல்லை எடுப்பதற்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்கள்! – 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு!
, வியாழன், 21 அக்டோபர் 2021 (11:10 IST)
குஜராத்தில் அறுவை சிகிச்சையை தவறாக செய்து நோயாளியை கொன்ற வழக்கில் 10 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கடந்த 2011ம் ஆண்டில் சிறுநீரகத்தில் கல் இருந்ததால் அதை அகற்ற நோயாளி ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த போது சிறுநீரகத்தில் இருந்த கல்லை அகற்றுவதற்கு பதிலாக சிறுநீரகத்தையே அகற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நோயாளியின் உறவினர்கள் நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் புகார் அளித்த நிலையில் விசாரணைக்கு பின் மருத்துவமனை இழப்பீடு தர சம்மதித்துள்ளது. அதன்படி ரூ.11 லட்சம் 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்மா உணவகத்தில் சப்பாத்தி இனி கிடையாதா? – சென்னை மாநகராட்சி விளக்கம்!