Publish Date: Wed, 13 Oct 2021 (19:08 IST)
Updated Date: Wed, 13 Oct 2021 (19:10 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பழம்பெரும் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங் அவர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மன்மோகன் சிங் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.