Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோட்டையை பிடிக்க ஜிஎஸ்டி என்னும் ஆயுதம்!

Advertiesment
கோட்டையை பிடிக்க ஜிஎஸ்டி என்னும் ஆயுதம்!
, செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (16:22 IST)
ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் பல்வேறு பொருட்கள் கொண்டுவரப்பட்டது. பொருட்கள் மீதனான வரி ஒன்றிற்கு ஒன்று மாறுபட்டு அதிகமான ஒன்றாகவும் இருந்தது. இதை எதிர்த்து புகார்களும் எழுந்தன. 
சில பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வந்தன. அதையடுத்து அவ்வப்போது வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இருப்பினும் சில பொருட்களுக்கான வரி அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், விரைவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2019 தேர்தலுக்கு முன்பாக இந்த தேர்தல் நடப்பதால் இது, மினி பாராளுமன்ற தேர்தலாக கருதப்படுகிறது.
 
மேலும் இந்த நான்கு மாநிலங்களும் பாஜகவின் கோட்டையாகும். எனவே, கோட்டையை பிடிக்க ஜிஎஸ்டி வரியை குறைப்பதுடன் குறு, சிறு தொழில்களுக்கான விதிமுறைகளையும் தளர்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
வருகிற 28 ஆம் தேதி கோவாவில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓசி கோட் வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்த இம்ரான் கான்!