கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜிஎஸ்டி வரி வசூல் திருப்தியாக இல்லாததால் மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி பணம் வழங்கப்படமாட்டாது என மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்ததாக செய்திகள் வெளிவந்தது
இதனை அடுத்து தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் அதிர்ச்சி அடைந்தன, குறிப்பாக தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற மாநில அரசு தீவிர முயற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தின. திமுக தலைவர் முக ஸ்டாலின் இது குறித்து அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பல மாநிலங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஜிஎஸ்டி நிலுவை தொகையை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று இரவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று இரவுக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்கப்படும் என அறிவித்தார்
20 ஆயிரம் கோடி ரூபாயை மாநிலங்களுக்கு நிலுவைத் தொகையாக கொடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் இரவோடு இரவாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது