Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காஷ்மீர் ஆப்பிள் – நேரடியாக மத்திய அரசே கொள்முதல் !

Advertiesment
காஷ்மீர் ஆப்பிள் – நேரடியாக மத்திய அரசே கொள்முதல் !
, புதன், 11 செப்டம்பர் 2019 (09:39 IST)
காஷ்மீரில் 370 சிறப்புப் பிரிவை ரத்து செய்ததை அடுத்து காஷ்மீர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஆப்பிள்களை மத்திய அரசே கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவம் இன்னும் திரும்ப பெறப்படவில்லை. காஷ்மீரில் துண்டிக்கப்பட்ட வெளியுலகத் தொடர்பும் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் காஷ்மீர் விவசாயிகள் தங்கள் ஆப்பிள்களை சந்தைகளில் விற்கக் கூடாது என தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் ஆப்பிள்களை விற்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் காஷ்மீர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மத்திய அரசே ஆப்பிள்களைக் கொள்முதல் செய்யும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏ, பி மற்றும் சி என அனைத்து வகையான ஆப்பிள்களும் வாங்கப்பட்டு அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்ர்ருள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பைக் ஓட்ட கற்று கொண்டபோது விபத்து: சென்னை இளம்பெண் பலி