Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணிதம், இயற்பியல் இல்லாவிட்டாலும் பொறியியல் படிப்பு அட்மிசன்! – புதிய நடைமுறை அறிவிப்பு!

Advertiesment
கணிதம், இயற்பியல் இல்லாவிட்டாலும் பொறியியல் படிப்பு அட்மிசன்! – புதிய நடைமுறை அறிவிப்பு!
, வெள்ளி, 12 மார்ச் 2021 (11:11 IST)
பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் அவசியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது

இந்தியா முழுவதும் பொறியியல் படிப்புகள் மாணவர்கள் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களை கற்றிருப்பது அவசியமாக உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த விதிகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மாற்றியமைத்துள்ளது.

அதன்படி 12ம் வகுப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், உயிரியல், வேளாண்மை, பயோ டெக்னாலஜி, வணிகம், தொழிற்கல்வி, மின்னணுவியல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் மூன்று பாடங்களை படித்திருந்தால் மட்டும் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் இந்த புதிய நடைமுறையால் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் கூடுதல் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோலாவா களமிறங்குறது ரிஸ்க் அண்ணே!? – விஜயகாந்தை சந்திக்கும் டிடிவி தினகரன்!