Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்: ஏன் தெரியுமா?

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட கூகுள்: ஏன் தெரியுமா?
, வெள்ளி, 4 ஜூன் 2021 (07:40 IST)
இந்தியாவின் மோசமான மொழி எது என கூகுள் தேடுபொறியில் ஒருசிலர் தேடிய போது அதற்கு கூகுளில் கன்னடம் என்று பதில் வந்துள்ளதை அடுத்து கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர்கள் கூகுள் நிறுவனத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர் 
 
2500 வருடங்கள் பழமையான கன்னட மொழியை கூகுள் அவமதிப்பு செய்து விட்டது என்றும் இதனை அடுத்து கூகுள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடக மாநில பண்பாடு மற்றும் வனத்துறை அமைச்சர் கூறியிருந்தார். இதனால் கூகுள் மீது வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் கூகுள் அதிகாரி ஒருவர் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். கூகுள் தேடுதளத்தில் எதிர்பாராதவிதமாக கன்னடம் மோசமான மொழி என்று வந்துவிட்டதாகவும் மோசமான மொழி கன்னடம் என்பது கூகுள் கருத்து இல்லை என்றும் எனவே கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் கூகுள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனை உடனடியாக சரி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகேஷ் அம்பானியின் சம்பளம் ஜீரோ: கொரோனா செய்த வேலை!