Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண் நடிகைகள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்… விஷால் மீது விமர்சனம் வைக்கும் காயத்ரி ரகுராம்!

Advertiesment
PBSS
, சனி, 29 மே 2021 (16:09 IST)
நடிகர் விஷால் பத்மா ஷேசாத்ரி பள்ளி  விவகாரத்தில் கருத்து கூறிய நிலையில் அவரை காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்த நிலையில் சற்று முன் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பள்ளி சார்பில் இருந்து இப்போதாவது பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் மன்னிப்பு கேளுங்கள் என்றும் இதை ஒரு ஜாதிப் பிரச்சனையாக மாற்றாதீர்கள் என்றும் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.
இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும். குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்." எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் விஷாலுக்கு பதிலளிக்கும் வகையில் டிவிட்டரில் ‘பெண் நடிகைகள் உங்களைப் பார்த்து பயந்து ஓடுகிறார்கள். ஏனென்றால் உங்கள் அனுகுமுறை அப்படி. நீங்கள் உங்கள் ஹீரோயிஸம் எல்லாம் உங்கள் துறையின் நடிகைகளுக்கு பிரச்சனை வரும்போது காட்டுங்கள். ஒரு சினிமா நடிகராக உங்கள் துறையில் இருக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி கண்டியுங்கள். புதிதாக நடிக்க வரும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள்.  நீங்களும் உங்கள் நண்பர்களும் பெண்களை பயன்படுத்தி தூக்கி எறியும் குழுவில் ஒருவர்கள்தான்.  நிறைய பெண்கள் உங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போலியோவுக்கு எதிராக ரஜினி செய்ததை… இப்போது விஜய் அஜித் செய்வார்களா?