Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடத்தல் தங்கத்தை கடத்திய ராணுவ கர்னல் மற்றும் வீரர்கள் கைது

Webdunia
வெள்ளி, 6 மே 2016 (12:01 IST)
மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை ராணுவ கர்னல் மற்றும் உட்பட 8 ராணுவ வீரர்கள் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கவுகாத்தி ஐஸ்வால் காவல் நிலையத்தில் ஒருவர் சமீபத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
 
அதில்  2014ஆம் ஆண்டு கடைசியில், மியான்மரில் இருந்து மிசோரம் மாநிலத்திற்கு ரூ.14.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை தான் கடத்தி வந்தபோது, துப்பாக்கி முனையில் அங்கு வந்த எட்டு ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ கர்னல் ஆகியோர் அந்த தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக புகார் அளித்தார்.
 
மேலும், அதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூடாது என்று தன்னை எச்சரித்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
 
இதுபற்றி விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுவினர், இந்த செயலில் ஈடுபட்ட அசாமின் 39 அசாம் ஆயுதப்படை பிரிவின் கர்னல் ஜஸ்திங் சிங் தலைமையிலான குழுவினரை விசாரணை நடத்தினர்.
 
அதில், ராணுவ வீரர்கள் தங்கத்தை கொள்ளையடித்தது, அதை பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கர்னல் ஜஸ்திங் சிங் இடை நீக்கம் செய்யப்பட்டார். மற்ற 8 ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் ரூ.320 குறைந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000க்கும் கீழ்.. மக்கள் மகிழ்ச்சி..!

அதிமுக கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் வருகிறது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அதானி நிறுவனத்திற்கு 8 கோடி சதுர அடி நிலம் வழங்கிய அரசு: நீதிமன்றம் கண்டனம்..!

ஒவ்வொரு தொகுதியிலும் உங்கள் திருட்டை கண்டுபிடிப்பேன்! - தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி சவால்!

வாரத்தின் 2வது நாளிலும் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments