Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விண்ணைத் தொடும் தங்கம் விலை !ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?

Advertiesment
விண்ணைத் தொடும் தங்கம் விலை !ஒரு பவுன் எவ்வளவு தெரியுமா?
, ஞாயிறு, 9 ஜூன் 2019 (09:57 IST)
நம் நாட்டில்தான் எந்த விழாவுக்கும், நிகழ்சிகளுக்கும், பண்டிகைகளுக்கும் தங்க நகைகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் பழக்கம் உண்டு. இன்னும் சொல்லப்போனால் தங்கம் இந்தியர்களுக்கு மிகவும் நெருக்கமான  ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அட்சயத்திருதியை தினத்தின்போது நமது நாட்டில் உள்ள கடையில் எகிறும் வியாபார விற்பனையும் இதற்கு மற்றொரு சான்று.
இந்நிலையில் தங்கம் விலையானது இம்மாதத் தொடக்கம் முதலே அதிகரித்த வண்ணமாய் உள்ளது.கடந்த 4 ஆம் தேதி பவுனுக்கு  ரூ 168 ம் ,5 ஆம் தேதி பவுனுக்கு  ரூ152 ம் என தங்கம் விலை விலை உயர்ந்தபடியே இருந்தது.
 
இந்நிலையில் நேற்றுக்கு முந்தினம் ஒரு கிராம் ரூ.3123 க்கும் , ஒரு பவுன் ரூ25136க்கு விற்பனையான நிலையில் மாலைநேர நிலவரப்படி ஒரு கிராம் ரூ.3142க்கும், ஒருபவுன் 25136க்கும் விற்பனை ஆனது. 
 
இந்நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் ஏழை, எளியவர்களால்  தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயமான விமானம்: தகவல் தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் என அறிவிப்பு!