Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

#GobackAmitShah: மாயமாகிய ஹேஷ்டேக்!

Advertiesment
#GobackAmitShah: மாயமாகிய ஹேஷ்டேக்!
, திங்கள், 9 ஜூலை 2018 (21:10 IST)
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்திருந்தார்.  தமிழகத்தில் பாஜக பலவீனமாக இருப்பதால் வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது, மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி அதனை எப்படி ஓட்டுகளாக மாற்றுவது என்பது குறித்து பேசினார். 
 
ஆனால், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இணையத்தில் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது. அனால், அந்த ஹேஷ்டேக் தற்போது சென்னை அளவில் கூட டிரெண்டிங் பட்டியலில் இல்லாமல் காணமல் போனது. 
 
இதே போல், கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரலானது. ஆனால், அமித் ஷாவுக்கு பிரதமர் மோடிக்கு இருந்த அளவுக்கு எதிர்ப்பு இல்லை. 
 
இருப்பினும், அவரை எதிர்த்து மீம்ஸ் பல வெளியாகின. ஆனாலும், டிரெண்டிங் பட்டியலில் இருந்த இந்த குறிப்பிட்ட ஹேஷ்டேக் திடிரென காணவில்லை. டிரெண்டிங்கில் இல்லை என்றாலும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலர் தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரிய மாளிகையில் சின்ன பல்ப் இல்லை: ஸ்டாலினை விமர்சித்த ஜெயகுமார்!