Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எதிர்ப்பாளர்களின் கிண்டல்களுக்கு மார்ச் மாதம் பதில் கிடைக்கும்: அமித்ஷா

எதிர்ப்பாளர்களின் கிண்டல்களுக்கு மார்ச் மாதம் பதில் கிடைக்கும்: அமித்ஷா
, திங்கள், 9 ஜூலை 2018 (19:55 IST)
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் இன்றைய சென்னை வருகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திராவிட கட்சிகளுக்கு இணையாக பாஜக தொண்டர்கள் கட் அவுட், பேனர்கள் வைப்பதில் இடம் பிடித்தனர். நீதிமன்றமே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் அமித்ஷாவின் கட் அவுட்டுக்கள் இன்று சென்னையை அலங்கரித்தன
 
ஆனால் வழக்கம்போல் நெட்டிசன்கள் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக 'கோபேக் அமித்ஷா' ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது. சமூகவலைத்தளங்களில் பாஜகவுக்கு எதிராகவும், அமித்ஷாவுக்கு எதிராகவும் பல்வேறு கருத்துக்களும் அவரது வருகைக்கு எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டன
 
இந்த நிலையில் இந்த எதிர்ப்புகளை அமைதியாக கவனித்த வந்த அமித்ஷா, பாஜக நிர்வாகிகளிடம் பேசியபோது, 'தமிழகத்தில் நான் வரும்போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கிண்டல், கேலி செய்கின்றனர். வரும் 2019 மார்ச்சுக்குள் தமிழகத்தில் பாஜக எங்கே இருக்கிறது என எதிர்ப்பாளர்கள் பார்ப்பீர்கள். இன்றைய எதிர்ப்பாளர்களுக்கு பதில் மார்ச் மாதம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். 
 
உண்மையில் மார்ச் மாதத்திற்குள் பாஜக தமிழகத்தில் வளர்ந்துவிடுமா? அல்லது அமித்ஷாவின் சவால் வெற்று அறிவிப்பா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டேக் எ பிரேக்; பேஸ்புக்கின் புதிய அப்டேட்