தேசிய கட்சியான பாஜக என்னத்தான் பல இடங்களில் ஆட்சி அமைத்து வந்தாலும், அந்த கட்சியால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தனது ஆதிகத்தை செலுத்த முடியவில்லை. அதர்கு சிற்ந்த உதாரணம் தமிழகம்.
தமிழ்கத்திற்கு மோடி வந்த போதும் அமித்ஷா வந்தபோது கோ பேக் என்ற வார்த்தை அதிகம் மக்கள் மத்தியில் ஒலித்தது. டிவிட்டரில் தேசிய அலவிலும் உலக அலவிலும் டிரெண்டானது.
தற்போது இந்த கோ பேக் கோஷம் மேற்கு வங்கத்திலும் ஒலிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அமித்ஷா கலந்துக்கொள்வதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், அமித்ஷாவை வரவேற்க ஊரெல்லாம் பேனர்கள், அமித்ஷா தோரணங்கள், அவருக்கு ஆளுயர கட் அவுட்களும் வைக்கப்பட்டு பயங்கரமான வரவேற்பு ஏற்பாடு நடைபெற்றது.
ஆனால், வரவேற்பு கட் அவுட்டுகளுக்கு மத்தியில் கோ பேக் அமித்ஷா, ஆன்ட்டி பெங்கால் பிஜேபி கோ பேக் போன்ற பேனர்களும் வைக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாஜகவினர் கடுப்பின் உச்சத்திற்கே சென்றனர். கோபப்பட்டு என்ன பயன் அவமானம் அவமானம் தானே...