டில்லியில் சில தினங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து டிரைவரின் சடலம் சாலையோரத்தில் மீட்கப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரிக்கையில் டிரைவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதேபோல் சில ஆட்டோ டிரைவர்கள் இறந்திருப்பதும் தெரியவந்தது.எனவே போலீஸார் இக்கொலை குறித்து தம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதனையடுத்து பக்தாவர்புர் கிராமத்து மக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஷிவகுமார் மற்றும் அவரது தங்கையிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரும் இரவுகளில் அடிக்கடி தாமதமாக வந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து இருவர் மீதும் சந்தேகம் கொண்ட போலீஸார், கடந்த செவ்வாய்கிழமை இருவரையும் கைது செய்தனர்.
பின்பு அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் காத்திருந்து, லிப்ட் கேட்பதும், லிப்ட் கிடைத்ததும் வாகனம் செல்லும் போது டிரைவரை கழுத்து நெறித்து கொலை செய்து விட்டு, வாகனத்தில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்து வந்ததை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர்.
இதில் லிப்ட் கேட்டால், நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தமாட்டார்கள் என்பதால் கவர்ச்சியாக சாலையில் அமர்ந்து வருகிற வாகனங்களை நிறுத்தியுள்ளார் நீலம். டிரைவர்கள் ஆசைப்பட்டு தம் வாகனத்தில் நீலத்தை ஏற்றிகொள்ளுவார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தச் சொல்லுவார் நீலம். அப்போது அவருடைய அண்ணன் நீலத்தின் துப்பட்டாவை டிரைவரின் கழுத்தில் இறுக்கி கொலைசெய்து, வாகனத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம் இருவரும் சேர்ந்து கொள்ளை அடித்துவிட்டு சென்றுவிடுவார்கள் என்பது தெரிய வந்துள்ளது.