Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கங்கையில குளிச்சா நேரா சொர்க்கம்தான் - உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்

கங்கையில குளிச்சா நேரா சொர்க்கம்தான் - உறுதிப்படுத்திய ஆராய்ச்சியாளர்கள்
, வெள்ளி, 31 மே 2019 (12:09 IST)
இந்தியாவில் மிக முக்கியமான நதியாகவும், புனித நீர்நிலையாகவும் கருதப்படுவது கங்கை நதி. இமயமலையில் தோன்றும் கங்கை நதி ஹரித்துவாரில் தொடங்கி உத்தர பிரேதசத்தின் வழியாக பயணித்து கல்கத்தா, வங்காளதேச பகுதிகளுக்கு சென்று கடலில் கலக்கிறது.

கங்கை நதியில் மட்டுமே டால்பின், நீர்நாய் போன்ற கடல் உயிரினங்களும், முதலை போன்ற சதுப்பு நில உயிரினங்களும் ஒன்றாக வாழ்கின்றன.

இந்தியாவில் உள்ள வற்றாத ஜீவ நதிகளில் முதன்மையானது கங்கை நதி. புனித நதியாக கருதப்படுவதால் இதன் பாதையில் ஏராளமான புனித தலங்கள் உண்டு. அந்த புனித தளங்களுக்கு செல்பவர்கள் புனித நதியான கங்கையில் குளிப்பதன் மூலமும், அந்த நீரை பருகுவதன் மூலமும் செய்த பாவங்கள் நீங்கி தாங்கள் சொர்க்கத்தை அடைவோம் என நம்புகிறார்கள். தற்போது கங்கை நீரை குடித்தால், குளித்தால் மோச்சம் அடையலாம் என ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ளது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
webdunia

இந்தியாவின் புனித நதி சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது. கங்கை நதியின் பல பகுதிகளில் மோசமான பாக்டீரியாக்கள் அதிக அளவில் பரவியிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, கங்கை நீர் குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ உகந்தது அல்ல. அதை குடித்தால் நோய்தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளது என தெரிவித்துள்ளனர். கங்கை நதி பாயும் பல பகுதிகளிலும் எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரி ஆய்வில் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் சுத்திகரித்து உபயோகப்படுத்தும் நிலையில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

சொர்க்கத்தை பார்க்க விரும்புபவர்கள் புனித நதியில் நீராட வேண்டும் என்று சொன்னது இந்த வகையிலும் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்கெட்ச் அவரு? வாய்ஸ் இவரா? மோடியின் சூப்பர் ப்ளான்!!