Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத முதல்வர்கள்

Advertiesment
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காத முதல்வர்கள்
, புதன், 29 மே 2019 (15:09 IST)
மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாளை ஆட்சியமைக்க இருக்கிறது பாஜக. மீண்டும் நரேந்திர மோடியே பிரதமராக பதவியேற்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அரசியல்ரீதியான சில முரண்பாடுகளால் சில முதல்வர்கள் இதில் கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி அரசியல் சாசனரீதியாக பார்க்கும்போது போக வேண்டியிருக்கிறது என்று முதலில் தெரிவித்திருந்தாலும் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் விவகாரம் மேற்கு வங்கத்தில் உச்சத்தில் போய்க்கொண்டிருக்கிறது. பாஜகவினர் 52 பேர் இறந்ததற்கு திரிணாமூல் காங்கிரஸ்தான் காரணம் என அம்மாநில பாஜக தலைவர் குற்றம் சாட்டினார். ஏற்கனவே பாஜகவோடு பயங்கரமான கருத்து வேறுபாட்டில் உள்ள மம்தா இந்த பிரச்சினையால் பதவியேற்பு விழாவுக்கு செல்லபோவதில்லை என கூறி வருகிறார்.
கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள போவதில்லை என அவரது அலுவலகத்திலிருந்து அதிகாரபூர்வ கடிதம் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் பழைய தெலுங்கு தேசம் ஆட்சி கலைக்கப்பட்டு ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி நாளை பதவியேற்கிறார். அதனால் அவரால் மோடியின் பதவியேற்பு விழாவிற்கு செல்ல முடியாது.

தமிழகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு கூட்டணியில் இருப்பதால் அவர் விழாவில் கலந்து கொள்வார். எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலினுக்கு ஒரே நேரத்தில் மோடி பதவியேற்பு விழா மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழா இரண்டுக்குமே அழைப்பு வந்திருப்பதால் அவர் எதில் கலந்து கொள்வார் என்பது பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடிப் பதவியேற்பு விழாவில் நானா ? – பொங்கிய மம்தா !