Publish Date: Sun, 10 Sep 2023 (13:45 IST)
Updated Date: Sun, 10 Sep 2023 (13:51 IST)
டெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல உலக தலைவர்கள் கலந்து கொண்டனர்
நேற்று தலை நகர் டெல்லியில் தொடங்கிய ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த உலகத் தலைவர்கள் இன்று காலையில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செய்தனர்.
2 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில், ஜி 20 உச்சி மாநாடு நிறைவுபெற்றது.
இந்த நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டை நடத்தும் தலைமை பொறுப்பை பிரேசில் ஏற்கிறது. இதற்காக பொறுப்பை இந்திய பிரதமர் மோடி, பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார். அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு பிரேசில் வசமாகவுள்ளது.
எனவே அடுத்த வருடம் ரியோ டி ஜெனியோவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாடிற்கு வரும்படி உலகத் தலைவர்களுக்கு பிரேசில் அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.