பெரும் செலவில் ஜி20 உச்சி மாநாடு; ஆனால் முக்கிய தலைவர்கள் வராதது ஏன்?

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (11:34 IST)
இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது.



ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டெல்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா முன்னதாக அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொள்வார் என்றும், புதின் வீடியோ கால் உள்ளிட்ட எந்த வழியிலும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து சீன அதிபரின் ஆலோசகர் மட்டும் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

ஸ்பெயின் அதிபர் கொரோனா காரணமாக உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை. மிகப்பெரும் பொருட்செலவில் நடத்தப்படும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு முக்கியமான நாட்டு அதிபர்கள் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கூரை அமைக்க வேண்டும்.. புறப்படும் நேரம், வரும் வழி, வரும் நேரம் தெரிவிக்க வேண்டும்: தவெகவுக்கு நிபந்தனை..!

டிசம்பர் 18ல் நடைபெறும் ஈரோடு கூட்டத்தில் கூட்டணியை அறிவிக்கின்றாரா விஜய்? காங்கிரஸ் யார் பக்கம்?

7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியது.. பனி மூட்டத்தால் டெல்லி அருகே பயங்கர விபத்து..!

ஃபுல்லா முள்வேலி!.. ஒருத்தனும் ஏற முடியாது!.. ஈரோடு தவெக பொதுக்கூட்ட அப்டேட்!...

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

அடுத்த கட்டுரையில்
Show comments